ராஜபக்ஷக்களுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது, காவல்துறைக்குப் பெறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க, ராஜபக்ஷர்களுக்கு சார்பாக செயல்படுவதாக ஜனாதிபதிக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ராஜபக்ச அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் போது தாமதம் ஏற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து �கேட்டிருந்தபோதே ஜனாதிபதி செயலக அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை மழுங்கடிக்கச் செய்து, ராஜபக்ஷர்களை மீண்டும் அரசியல் ரீதியாக செயல்படுவதற்கு வாய்ப்பளித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்துவதற்கு திட்டமொன்று இருக்கின்றதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், ஜோன் அமரதுங்கவிடமிருந்து காவல்துறை பொறுப்புக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அதிகாரங்களும் ஜனாதிபதியினால் நேற்றுமுன்தினம் (13) குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add Comments