இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
மாற்றுக்கொள்கை நிலையம் வெளியிட்டு;ள்ள அறிக்கையொன்றில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு ,சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல், உட்பட அரசாங்கம் முன்nடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடருவேண்டும்,அதிகார பகிர்வு, அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான பாரிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் புதிய அரசாங்கம் தனது முதல் மாதத்தை ப+ர்த்திசெய்கின்ற இந்த தருணத்தில் அரசியல் சீர்திருத்த யோசனைகள் எவ்வாறு முன்னெடுக்கப் படுகின்றன என்பது குறித்த போதிய தகவல்கள் பொதுஅரங்கில் காணப்படாதது குறித்தும் அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை போன்ற நீண்ட கால ஜனநாயகத்தில் அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் உரியது அல்ல. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன, அரசியல் கட்சிகள் மத்தியில் அது குறித்து எவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன, என்ற வியடங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப் படவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.