கடந்த ஆறுவருடங்களிற்;கு மேலாக சிறையில் இலங்;கை அரசின் இரகசிய தடுப்பு முகாமிலிருந்த இந்திய மீனவரொருவர் யாழ்.சிறைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நாகப்பட்டினத்தை சேர்ந்தவரென நம்பப்படும் முருகன் (41 வயது) என்பவரே தற்போது இவ்வாறு யாழ்.சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதமளவில் இவர் மன்னார் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பின்னர் அடையாளம் தெரியாத இரகசிய முகாம் ஒன்றினில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதே யாழ்.சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மீனவரை அண்மையில் கடற்படையால் கைதான இந்திய மீனவர்களே அடையாளம் கண்டுள்ளனர். எனினும் குறித்த மீனவருடன் சேர்த்து வேறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனரா அவர்களிற்கு என்ன நடந்ததென்பது பற்றி தகவல்கள் இல்லாதேயுள்ளது.