லண்டனனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் கூட சூப்பர் சிங்கர் பாடகி ஜெசீகாவின் ,காலைவாரியது ஏன் ? என்று கனேடிய வானோலியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விஜய் TV நடத்திவரும் சூப்பர் சிங்கர் போட்டி தொடர்பாக நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் விஜய் TV தற்போது புலம்பெயர் நாடுகளிலும் கால் ஊன்றி உள்ளது என்றால் அதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் என்பதனை எவரும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது. விஜய் TV நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதி முடிவுகள் குறித்து இதுவரை சர்சைகள் இருந்து வருகிறது. தற்போது ஜெசீகாவுக்கே அதிக வாக்குகள் விழுந்தது என்று விஜய் TV ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் தமது நடுவர்கள் , எடுத்த முடிவுதான் அது என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொள்ளப் பார்கிறார்கள். இதேவேளை லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் “லிபரா” மோபைல் நிறுவனம், மாதம் தோறும் லட்சக்கணக்கான ரூபாயை விஜய் TVக்கு விளம்பரமாக கொடுத்து வருகிறது. அதுபோக அவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்சியின் பிரதான அனுசரணையாளராகவும் இருக்கிறார்கள். குறித்த இந்த விடையம் தொடர்பாக, இதுவரை அவர்கள் எதனையும் கூறவில்லை. விஜய் TV நடந்துகொண்ட விதம் தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்ட தவறிவிட்டார்கள். இவ்வாறு கனேடிய வானொலி ஒன்றில் , ஈழத்து பெண் ஒருவர் குமுறியுள்ளார். மேலும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த விஜய் TV சந்தாக்களை காசுகொடுத்து வாங்கிவைத்துள்ள , தமிழர்களையும் அவர் சாடியுள்ளார்.
ஒரு இடத்தில் அநீதி நடந்தால் அதனை , அனுசரணையாளர் என்ற வகையில் லிபரா மோபைல் தட்டிக் கேட்டிருக்கவேண்டும். ஜெசீகாவின் காலைவார இவர்கள் துணைபோய் இருக்க கூடாது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. வெறும் பணத்தை மட்டும் அள்ளிக்கொடுத்துவிட்டு , வேடிக்கை பார்ப்பது என்றால் அதில் என்ன அர்தம் இருக்கிறது. மேலும் லண்டனில் இயங்கிவரும் ஐ.பி.சி ரேடியோவில் தேசிய தலைவரது மகள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள். அதுபோக இனி ஒரு போராட்டம் வராது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை இவர்கள் மக்கள் மத்தியில் விதைக்கப் பார்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. குறித்த ஐ.பி.சி ரேடியோவும் லிபரா மோபைல் கம்பெனியின் கீழ் இயங்கிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
தம்மை தமிழ் தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அதன் போர்வையின் கீழ் இருந்துகொண்டு, நாசகாரவேலைகளை இவர்கள் செய்துவருகிறார்களா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக , லண்டனில் உள்ள பல தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.