கிளிநொச்சியில் தர்மசிறீயின் அடாவடி தொடர்கிறது

கிளிநொச்சியில் இல 89 ஏ9 வீதியில் விசாலம் என்பவரது காணியை முன்பு மகிந்த ராஜபச்கவின் அடாவடிக்கும்பலில் இருந்து பலமோசடிகள் மணற்கொள்ளை இரும்புக்கொள்ளை கூட்டுறவுசங்க மோசடி என்பவற்றில் ஈடுபட்ட பொன்தம்பி தர்மசிறீ, தம்பிஐயா தர்மசிறீ என இரண்டு பெயர்களில் ஆள்மாறாட்டத்தையும் செய்துவரும் தர்மசிறீ அடாத்தாக பிடித்து விசாலம் என்பவரது குடும்பத்தை அச்சுறுத்தி வருகின்றார்.
இதற்கு கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் தர்மசிறீயிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தர்மசிறீக்கு ஆதரவாக இருந்து காணி உரிமையாளரிடம் காணியை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வருவதுடன் தொடர்ந்தும் கணவனை இழந்த விசாலம் என்பவரின் குடும்பத்தை தர்மசிறீ கொலை அச்சுறுத்தல் விடுப்பதற்கும் ஒத்துழைத்து வருதாக தெரியவருகின்றது.
கரைச்சி பிரதேச செயலருக்கு இந்த காணியின் விடயம் தொடர்பாக அனுப்பப்படும் கடிதங்களுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதுடன் எந்த நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila