தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள கொடி!– கண்டி தலதாமாளிகையில் பதற்றம்!

கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவ யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.
நேற்று தலதா மாளிகையில் பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து தலதா மாளிகையின் நிர்வாக செயலாளரின் புகாரின் அடிப்படையில் கண்டி பொலிசார் விசாரணைகணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila