இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச் சினைத்தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும்.
பொதுத் தேர்தலின் பின்னரே இவை நடக்கும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் முகாமையாளர்களை நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார். அதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.