யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம் காலை முதல் தொடர்கிறது

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம் காலை முதல் தொடர்கிறது:-

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரக் கோரியும் திட்டமிட்டபடி ஐ.நா அறிக்கையை வெளியிடக்கோரியும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.     இன்று காலை யாழ். மாவட்டத்திற்கான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக  ஆரம்பமாகியுள்ளளது.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பிற்பேடப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட படி  எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்  அறிக்கையினை வெளியிடக் கோரியும்  இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியிலும் யாழ்.போராட்டத்திற்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டமும்  உணவு தவிர்ப்புப் போராட்டமும் இன்று நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி  கந்தசாமி  ஆலயத்திற்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதிக்கான மனுவும் கையளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி அனந்தி இன்று உண்ணாவிரதம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கின்றார்.  யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிமுதல் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

வடபகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்து காணாமல் போனவர்கள், உட்பட மீள்குடியேற்றம் போன்றவற்றினை வலியுறுத்தி இவர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்படுகிறது.  இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், உட்பட தாய்மார்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மேற்கூறிய விடயங்களை நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila