
19வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அதிலுள்ள சில பிரிவுகளில் சிக்கல் இருப்பதால் அது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த சிக்கலான பிரிவுகளை நீக்குவதாக கூறியுள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் அரசாங்கம் வினவியிருந்தது. நீதிமன்றம் இது பற்றிய தன் பரிந்துரையை சபாநாயகரிடம் கூறியிருந்தது. இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று மாலை 03.00 மணியளவில் இது பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.