ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள் ளிட்ட பரந்துபட்டவர்களிடத்தில் எந்தவிதமான கொள்கை வேறு பாடுகளும் இல்லை. ஆனால் தமிழ ரசு கட்சியே தமிழ்த் தேசியக் கொள் கைக்கு விரோதமாக செயற்படு கின்றது.
தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையில் இருந்து விலகிச் சென்று, மக்கள் தொடர்பில் தவ றான முடிவுகளை எடுக்கும் தமிழ ரசு கட்சிக்கு எதிராக தேர்தலில் பொது கூட்டமைப்பு நிச்சயம்களமிறங்கும்.
எதிர்வரும் 18ஆம் திகதி பொது கூட்ட மைப்பின் வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலை வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின ருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
உள்@ராட்சி தேர்தல் தொடர்பில் நேற்று நண்பகல் அவருடைய வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியி டும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆனாலும் கூட இத் தேர்தல் வடக்கு கிழ க்கு மாகாணங்களை பொறுத்தவரையில் தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டி யிடுகின்றது. இவ்வாறு தமிழரசு கட்சி போட் டியிட்டு வெல்லுகின்ற பட்சத்தில், அரசியல் சாசனம் தொடர்பான கொண்டுவரப்பட்ட இடைக்கால அறிக்கையையும், மக்கள் ஏற் றுக் கொண்டுவிட்டார்கள் என்ற பிரசாரத்தை செய்வதற்கு அவர்கள் இத் தேர்தலை பயன் படுத்தக் கூடும்.
அந்த வகையில் இவ்வாறான பிரசார த்தை தடுப்பதற்கும், இடைக்கால அறிக்கை யினை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை காண்பிப்பதற்கும், வடக்கு கிழக் கில் உள்ள உள்@ராட்சி சபைகளை திறம் பட நடத்துவதற்காகவும் தமிழரசு கட்சிக ளுக்கு எதிரான அணி ஒன்று உருவாவது அவசியமாகும்.
தமிழரசு கட்சியை தோற்கடிப்பதன் ஊடாக, தமிழ் தேசியம் என்பது பாதுகாக்கப்படுமாக இருந்தால் அதற்கான பலமான கூட்டணி உருவாக வேண்டும். அதற்கான வியூகங் கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களி டம் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. எல் லோரையும் அணிதிரட்ட வேண்டும். கொள் கையின்படி அணிதிரட்டும் போது, அது மக் கள் மத்தியில் பிரபல்யமான தந்தை செல்வா வால் முன்வைக்கப்பட்ட, எல்லோராலும் ஒரு காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உதய சூரியன் சின்னம் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இருந்த போதும் கொள்கை ரீதியில் நாங் கள் இன்னும் ஒன்றுபட்டுத்தான் இருக்கின் றோம். அந்த கொள்கைகளில் எந்தவிதமான வித்தியாசங்களும், மாறுபாடுகளும் எங்க ளுக்குள் கிடையாது.
நாங்கள் முன்வைத்த கொள்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் உருவாக்கு வதையும், உயர்மட்ட அரசியல் குழு ஒன் றினை நிறுவுவதையும், அக் குழுதான் முடிவு களை எடுக்கும் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் பரந்துபட்டவர்களை ஓர ணியில் திரட்டுவதற்கு இதுவே உகந்த நட வடிக்கையாக இருக்கும் என்பது எங்களு டைய கருத்தாக இருக்கின்றது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொண்டால் நாங்கள் முன்னேற முடியும்.
இதுதவிர எமக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் கொள்கை தொடர்பான கருத்து பேதங்கள் எதுவும் இல்லை. எதிர்வரும் 18ஆம் திகதிதான் தேர் தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய் யப்படவுள்ளது. அதுவரைக்கும் எமக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போதுமான காலம் உள்ளது என்றார்.