
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 13 ஆம் திகதி குருந்தூர் மலை விவகாரம் குறித்தான நீதிமன்ற தீர்ப்பில் அங்கு புதிதாக ஆலயங்கள் அமைக்கப்படமுடியாது என்றும், தமிழ் மக்கள் பாரம்பரிய கிராமிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொல்பொருள் திணைக்களம் ஆய்வு செய்வதாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றலுடனும் தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கினை நகர்த்தல் (மோசன்) பத்திரம் ஊடாக 27.09.18 அன்று நீதிமன்றிற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொல்பொருள் திணைக்களம் தங்கள் குருந்தூர் மலையில் மேற்கொள்ளவுள்ள செயற்பாட்டு விளத்தினை நீதிமன்றிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது