எனினும், எந்த விதமான அச்சுறுத்தல் வந்தாலும் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 39வது கூட்டத்தொடர் கடந்த 10ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இந்த கூட்ட தொடர் எதிர்வரும் 28ம் திகதி நிறைவடையவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள அனந்தி சசிதரன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்து போதே அவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இது குறித்து மனித உரிமைகள் பேரவையில் பேசி வருகின்றேன். எனினும், காணாமல் போனவர்கள் விடயத்தில் கால இழுத்தடிப்பு மாத்திரமே நடந்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் துணைப்போகின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.