வாள் வெட்டுக் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும், வன்முறை குழுக்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவது தமிழ் இனத்தை அழிக்கவே என்ற கோசங்களுடன் தொடங்கிய யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த திங்கள் கிழமை முதல் கலைப்பீட மாணவர்கள் தமது வகுப்புக்களை புறக்கணித்து வருகின்றனர். கடந்த 25ஆம் திகதி சுதுமலைப் பகுதியில் நடந்த இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவனின் கை துண்டானது.
அத்துடன் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்தனர். இனந்தெரியாத குழுவினர் வேறு யார்மீதோ வாள்வீச்சு நடந்த வந்த தருணத்தில் தவறி பல்கலைக்கழக மாணவர்கள்மீது வாள்வீச்சை நடத்திவிட்டுச் சென்றதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மா
ணவர்கள் இன்று புதன் கிழமை வரை வகுப்பு பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.