சாத்தியமற்றதாகத் தோன்றும் நல்லாட்சிக்கான சாத்தியக் கூறுகள்


நடைபெற முடியாத ஒன்றாக இருந்த ஆட்சி மாற்றம் திடீரென இப்போது நடந்து முடிந்ததுடன் சிலர் அதனை ஒப்பீட்டளவில் கடுமை இல்லாத சிறியதோர்  ‘அரபு வசந்தம்’என்று குறிப்பிட்டது மட்டுமல்லாது வாக்குறுதி அளிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் தாம் காத்திருந்த மாற்றங்க ளென்ற உணர்விலேயே இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மத்திய கிழக்கிலோவென்றால் பெருமளவிலான பாரிய நிதி மூல வளங்களுடன்கூடிய சக்தி வாய்ந்த சர்வாதிகாரத் தலைமைத்துவங்கள், உள்ளக மற்றும் வெளிநாட்டு தலையீடுகள் மூலம் அகற்றப்பட்டதாயிற்று.

இதன்மூலம் நல்லாட்சியுடன் கூடிய ஜனநாயக ஸ்தாபனங்களின் செயற்பாடுகளே மக்களால் எதிர்பார்க்கப்பட்ட புதிய மாற்றங்களாயின. ஆனாலும் இப்பிராந்தியங்களில் பலம்வாய்ந்த ஆட்சியாளர்களில்லாத காரணத்தினால் புதிய பயங்கரவாத அமைப்புகளின் எழுச்சியுடன் எதிராளி நாடுகளின் பின்னணி ஆதரவு பெற்ற சக்திகளாலும் அரசியல் மற்றும் மதவாதக்குழுக்கள் போன்ற ஏனைய வெவ்வேறு போராட்டக் குழுக்களாலும் அப்பகுதிகளனைத்துமே போர்க்களமாகியுள்ளது.

முன்னர் இப்பிராந்தியமே சர்வாதிகாரத்தின் இரும்புப்பிடியில் நசுக்கப்பட்ட விதமான ஒருமைப்பாட்டினை அனுபவித்திருந்தது எனலாம். இந்த ‘அரபு வசந்தம்’ என்ற மாற்றத்தின் உப- உற்பத்தியயான்றாக உருவெடுத்திருப்பதும் உலகிலேயே பெரும் பணபலம் படைத்த சக்தியாக வளர்ந்து வருவதுமான ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’  பயங்கரவாத அமைப்பானது ஏனைய நாடுகளின் பிரதேசப் பகுதிகளுக்குள்ளும் அத்துமீறி பிரவேசித்து வரும் நிலையில் மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்லாது முழு உலகிற்குமே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

வெளிவிவகார கொள்கையும்
நல்லாட்சியும்

ஒரு நாடானது தனது சர்வதேச உறவுகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான தனது ஆர்வத்தை தொடர்ந்தும் பாதுகாப்பான முறையில் தக்க வைத்துக் கொள்ளும்படியாக சுய ஆர்வ த்திற்குரிய மூலோபாயங்களை தெரிந்து கொள்வதே அதனது வெளிவிவகாரக் கொள்கையாக இருக்கும் எனலாம். ‘எல்லோரும் நண்பர்களே! பகையாளி எவருமில்லை!’ என்ற பொன்மொழிக்கேற்ற கோட்பாட்டையே இலங்கை தனது அணிசாராக் கொள்கைக்கான அடிநாதமாகக்  கொண்டுள்ளது.

எந்தவொரு வல்லரசுக் கூட்டினதும் பின் புல ஆதரவுமில்லாத இலங்கையின் சொந்த நலன்சார்ந்த உள்விவகார கொள்கையின் விசாலிப்பான வெளிவிவகார கொள்கையை சரியானபடி கையாளுவதன் பிரதி பலனையா நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்? ஒருநாட்டின் ‘நிதி’ மற்றும் ‘பண’ ரீதியான பொருளாதார அபிவிருத்தியயன்பது வெளி விவகாரக் கொள்கையின் சரியான முகாமைத்துவத்திலேயே தங்கியதாயிருக்கிறது.

எமது வெளிவிவகார கொள்கை உண்மையில் சரியான விதமாக கையாளப்படுகிறதா? அத்துடன் வெளிவிவகார கொள்கை மற்றும் வெளிவிவகார சேவைகளிலும் நல்லாட்சிக்கான அடிப்படை விதிமுறைகள் பிரயோகிக் கப்படுகிறதா என்பதை நாம் இன்னும் தீர்மானிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

ராஜபக்ச அரசினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் திடீரென இடைநிறுத்தப்பட்டமையானது பல்வேறு இராஜதந்திர ஸ்தானங்களிலும் முக்கியமான இந்தத் தருணத்தில் அதன் சேவைகளைக் கையாளுவதற்கான தலைமைகள்; இல்லாத காரணத்தினால் ராஜதந்திர வலையத்தள சேவை முடக்க நிலை உருவாகிற்று.

இவ்விதமான இடைநிறுத்தங்களை அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி போன்றவற்றுடன் தொடர்புபட்ட வெளிவிவகார தொடர் நடைமுறைகளை குழப்பாது தேவைக்கேற்ற முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக மேற்கொண்டிருக்கலாம்.

இராஜதந்திர சேவைகளுக்குள்ளாகவே முக்கிய மற்றும் உபசேவைகளுக்கென ஆற்றல் வாய்ந்த, குறைந்த ஆற்றலுக்கான தூதுவர்களை பணிக்கேற்றவாறு நாட்டுத் தலைவர்கள் நியமிக்கும் நடைமுறைகளுங்கூட அமெரிக்கா உட்பட ஏனைய வேறு நாடுகளிலும் சாதாரண வழமையாக நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.

வெளிவிவகார கொள்கையை கையாளுவது உட்பட அனைத்து துறைகளிலும் நல்லாட்சிக்கான விதிமுறைகள் கண்டிப்பாகவே கடைப்பிடிக்கப்பட வேண்டு மென்ற பார்வை எம் எல்லோருக்குமே உண்டு.

நல்லாட்சியும் மனித உரிமைகளும்

நல்லாட்சியும் மனித உரிமைகளும் இயல்பாகவே ஒன்றையயான்று உறுதிப்படுத்துபவையேயாகும். நல்லாட்சி நடைமுறையில் இல்லாத நிலையில் மனித உரிமைகள் பொருத்தமான விதத்தில் மதிக்கப்படுவதாக இருக்காது. மனித உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இயல்பானதொரு சூழ்நிலையுடன் கூடிய ஊக்குவிப்புக் காரணிகளுமே உதவி கரமானதாயிருக்கும்.

நல்லாட்சியும் மனித உரிமைச் செயற்பாடுகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவையே. பொருளாதார- சமூக- கலாச்சார மற்றும் அபிவிருத்திகளின் பலனை தத்தமது பங்காற்றலுடன் அனுபவிக்கும் அதிகாரபூர்வ உரிமையானது ஒவ்வொரு மனித உயிர்க்கும் உரியதென ‘அபிவிருத்தி உரிமைகளுக்கான பொதுச்சட்சம்’ (1 ஆவது சரத்து) அறுதியிட்டுக் கூறுகிறது. பொருளாதார கட்டமைப்புடன் அது சம்பந்தமான காரணிகளும் இணைந்த விதமான ஓர் சமநிலைச் செயற்பாடே நல்லதொரு அரசாங்கத்தினை நடை முறைப்படுத்துவதற்கு உகந்தது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆட்சிக்கான அதிகார ஆணை மக்களால் அளிக்கப்பட்டது. முன்னைய அரசு திருத்திக் கொள்வதற்கும் தற்போதைய அரசு வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தினை வழங்கும் விதமாக மக்கள் தாங்களாகவே உரத்த குரலில் தெளிவான முறையில் குரல் எழுப்பி வலியுறுத்தியிருந்தனர்.

எதிர்காலம் அவர்களையிட்டு தீர்மானிக்கு மளவிற்கு போட்டியான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? அந்த தகுதி எங்களையே சார் ந்ததாயிருக்கிறது. அதாவது எமது தாய்நாட்டையும் எமது எதிர்கால சந்ததியின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் அக்கறையும் எமதேயாகும். எமது அயல் நாடுகளும் உலகமும் எமது நடவடிக்கைகள் மட்டில் நேரடியாகவும் மறைமுக மாகவும் எவ்விதமான பிரதிபலிப்பைக் காட்டப் போகின்றன என்பதை எமது நாட்டின் ஸ்திரத்தன்மையும் சமாதான நிலைமையுமே நல்லவிதமாக தீர்மானிக்க வேண்டுமென்பதே எமது விருப்பமும் மன்றாட்டமுமாகும்.

ஏனென்றால் தற்போதைய எமது நிலைமை குழப்பகரமான ஒன்றாகவே தோன்றுகிறது. ஆனால், அசாத்தியமானதாக தோன்றியவை சாத்தியமாகியிருப்பதும் வெளிப்படையே. ஆகையால் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி அவர்களது செயற்பாடுகளே, எமது நாட்டினது ஸ்திரத்தன்மையற்றதும் குழப்பகரமானதுமான நிலையிலிருந்து அதனை வெற்றிகரமான முறையில் சிறப்பாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

முன்னேற்றப்பாதை

அனைவருக்கும் அனைத்து விதமான சுதந்திரங்களுடன் கூடியதும் நாட்டின் செல்வச் செழிப்பையும் அபிவிருத்தியையுமே நோக்காகக்கொண்ட பலமான நிர்வாக ஒழுங்கு முறைகளுடன் இணைந்த நல்லாட்சியை கண்டிப்பான முறையில் கடைப்பிடிப்பதே முன்னேற்றப் பாதையாக அமையுமென்பதே வெளிப்படை உண்மையுமாகும். ராஜ பக்ச தனது ‘குடும்ப அரசியல்’ மற்றும் ஊழல்கள் பற்றி குற்றச்சாட்டுக்களுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

அவர்மீதான இக்குற்றச்சாட்டுக்கள் மக்களிடமிருந்தே வந்ததாயிருந்தாலுங்கூட அவர் இப்போதும் அவர்கள் மத்தியில் பிரபல்யமிக்கவராகவும் அவர்களால் தொடர்ந்தும் நேசிக்கப்படுபவராகவுமே இருந்து வருகிறார். சிறிசேன- ரணில் கூட்டானது உயர் மட்டங்களிலான செயற்திறனின்மை மற்றும் ஊழல்கள் போன்றவை மட்டில் மிகவும் குறுகியதான காலவரையறை ஒன்றிற்குள் சிறப்பான விதமாக எதனையும் செய்து விடாத காரணத்தினால் மேற்படி முன்னைய அரசாங்கத்தின்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேற்றமெதுவுமின்றி முடங்கியிருப்பதான குற்றச்சாட்டுகள் கிளம்பியிருப்பதைத் தவிர வேறு எதுவும் நடைபெறுவதாக இல்லை.

சிறிசேன அவர்கள் எஞ்சியிருக்கும் தனது ஜனாதிபதி பதவிக் காலத்திற்குள் தனது கட்சி மற்றும் அரசாங்கம் மீதான அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துபவராகவே இருக்கிறார். ‘அதிகாரம்’ என்பது ஒரு மித்து அள்ளிக் கொள்ள முடியாத அகன்று பரந்த சமுத்திரம் போல விரிந்து கிடக்கிறது. ‘நல்லாட்சி’ தத்துவத்தின் அடிப்படையில் தெளிவான ஓர் பாதை எம்முன்னே நீண்டு கிடக்கும்போதே சம்பந்தப்பட்ட கட்சிகள் இவ் விடயத்தில் நாட்டின் நலனுக்காக பிரச்சினைகளை ஏன் தீர்த்துக்கொள்ள முடியாது? 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila