முல்லைதீவு கடற்றொழிலாளர்கள் அனுமதியற்ற கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளையும் உடனடியாக முல்வைத்தீவு மாவட்ட கடற்றொழில் மீன்பிடி நீரியல்வளத் திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30மணிவரை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் முன்பாக நடத்தப்பட்டது.

இதில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் அதன் சமாசமும் இணைந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவம் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

முல்லைத்தீவில் கோப்பாரப் ;பிட்டி தொடக்கம் நல்ல தண்ணி தொடுவாய் வரையிலுள்ள 74 கிலோ மீற்றர் கடலில் 3600 கடற்றொழிலாளர்கள் மீன் பிடி தொழில்; செய்கின்றனர்.

சட்ட விரோத மீன் பிடி, வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல், கடலட்டை பிடித்தல், சங்கு பிடித்தல், டைனமற் பாவித்து மீன்பிடித்தல் ஆகியவற்றால் இந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.

இவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறவும், தொழில் பாதிக்கப்படாமல் இருக்கவும், சட்டவிரோத மீன்பிடியை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் ஏற்கனவே மாவட்டச் செயலாளருக்கும் நீரியல் வளத்துறையினருக்கும் மகஜர்கள் கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila