கோதபாயவின் கைதை தடுத்ததா சட்ட மா அதிபர் திணைக்களம்? விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்

கோதபாயவின் கைதை தடுத்ததா சட்ட மா அதிபர் திணைக்களம்? விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்யப்படுவதனை, சட்ட மா அதிபர் திணைக்களம் தடுத்து நிறுத்தியதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளின் காரணமாகவே கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவது தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதபாய ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்டபூர்வதன்மையை கேள்விக்கு உட்படுத்தியும், கைது செய்;யப்படுவதனை தடுக்கும் நோக்கிலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஜூலை மாதம் 17ம் திகதிக்கு முன்னதாக எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், மனுதாரர் எதிர்ப்பை வெளியிடுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்படவில்லை.

பொதுவா அடிப்படை உரிமை மீறல் ஒன்று தொடர்பிலான இறுதித் தீர்ப்பு அளிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டு காலம் தேவைப்படும், சில நிர்வாக குறைபாடுகள் காரணமாக இந்த நிலைமை நீடிக்கின்றது.

பிரதமரும், சட்ட மா அதிபர் திணைக்களமும் கோதபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம் தொடர்பில் சர்ச்கை ஏற்பட்டுள்ளது.

நீதியரசர் குழாமில் அங்கம் வகிக்கும் நீதியரசர் சரத் டி ஆப்ரூவின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாக அவருக்கு வழக்கு விசாரணைக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை நடத்திய நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் ஆப்ரு ஆகியோர் கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆதரவாளர்கள்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நீதியரசர் குழாமில் சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒருவராக காணப்பட்ட புவனகே அலுவிஹார தனிப்பட்ட காரணங்களுக்காக இறுதி நேரத்தில் விசாரணைகளிலிருந்து விலகிக்கொண்டார்.

உச்ச நீதிமன்றின் நீதியரசர் குழாம் திட்டமிட்ட வகையில் நிர்ணயிப்பது தொடர்ச்சியாக திரைக்கு மறைவில் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றமை மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளான ரொமேஸ் டி சில்வா, சுகத் கல்தேரா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள்.

மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்த விடயத்தை பிரதி சொலிசுட்டர் ஜெனரல் அர்ஜூன் ஒபேசேகர வேண்டுமென்றே கவனத்திற் கொள்ளாதிருந்தார்.

லங்கா ஹொஸ்பிடல் கொடுக்கல் வாங்கல், மிக் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோதபாயவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களின் சட்டபூர்வ தன்மை குறித்து அவரது சட்டத்தரணி எழுப்பிய கேள்விகளுக்கு, பிரதி சொலிசுட்டர் ஜெனரல் உரிய பதிலளிக்கவில்லை.

மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கோதபாயவினால் வழங்கப்பட்ட முகவரி உண்மையானதல்ல என இன்டர்போல் அறிவித்திருந்தது.

இந்த விடயங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் வலுவான ஆதாரங்களுடன் காரணிகளை முன்வைக்கத் தவறியுள்ளது.

ஊடக செய்திகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோதபாயவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி கோரவில்லை.

மாறாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்டத்தன்மையை நீரூபிக்கும் முனைப்புக்களிலேயே சட்டத்தரணி ஈடுபட்டிருந்தார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவை கோதபாயவை கைது செய்யத் தீர்மானித்துள்ளதாக தினமின பத்திரிகையில் செய்தி வெளியிடப்டப்டிருந்தது என கோதபாயவின் சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தினமின பத்திரிகையின் செய்தி பிழையானது என தேசிய நிறைவேற்றுப் பேரவை மறுதினமே அறிவித்திருந்தது.

ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், விடயங்கள் தொடாபில் சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

மாறாக அமைச்சர்களின் கூற்றுக்களை பொறுப்பேற்க முடியாது என்றே வாதம் செய்திருந்தது.

வெள்ளைவான் கடத்தல்களுடன் கோதபாயவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட பலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த விடயங்கள் குறித்து நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கோதபாயவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் உயர்மட்ட அரசியல் தலையீட்டுடன் கூடியதாக அமைந்துள்ளதாக திணைக்களத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila