இராணுவ வசம் உள்ள கூட்டுறவு கல்லூரி கட்டிடம் விடுவிக்கப்படவேண்டும்: அமைச்சர் அனந்தி சசிதரன்
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா கூட்டுறவுக்கல்லூரியின் கட்டிடம் புனர்வாழ்வு முகாமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக கூட்டுறவுக்கல்லூரி வேறு இடத்தில் தற்காலிகமாக இயங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே வவுனியா மாவட்டத்தின் கூட்டுறவு மேம்பாட்டை நோக்கமாக கொண்டு உடனடியாக அக்கட்டிடத்தினை கூட்டுறவு அமைச்சிடம் ஒப்படைக்க ஆவன செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.