சம்பூர் மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவதை தடை செய்யக் கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும், மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான தனியார் நிறுவனம் ஒன்று இதற்கு எதிரான தடை விதிப்பு நடவடிக்கைகளை உயர் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்டு வருகிறது.
இவை உண்மையில் பொது மக்களின் காணிகள்.
எனவே இந்த விடயத்தில் குறித்த நிறுவனம் உரிமை கொண்டாட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.