தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை நாமல் உணர்கிறாரா? ஷிராணியின் மகன் கேள்வி

கடந்த இரண்டரை வருடக்காலத்தில் தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது தாம் எவ்வாறான உணர்வை கொண்டிருந்தேன் என்பதை நாமல் ராஜபக்ச தெரிந்துக்கொண்டாரா? என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மகன், சவீன் பண்டாரநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணியும் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிராந்தி ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு நிதிமோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு அழைத்துள்ளது.
இதனையடுத்து தமது தாயையும் சகோதரர்களையும் விட்டு விடுங்கள் என்ற வாசகத்தை நாமல் ராஜபக்ச, தமது முகநூலில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சவீன் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் தமது தாயும் தந்தையும் மாமாவும் அரசியல்வாதிகள் இல்லை. எனினும் உங்களுடைய ஆட்சியில் அவர்களை மானக்கேடாக நடத்திய போது நான் எந்தளவு கஷ்டப்பட்டிருப்பேன்.
ஊடகங்களில் அரசாங்கம் முற்றிலும் பொய்யான செய்திகளை வெளியிடும் போது நான் எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பேன் என்று கேள்வி எழுப்பியுள்ள சவீன், அனுதாபத்தை அல்லது ஆதரவை எதிர்ப்பார்க்கும் முன்னர் நீங்கள் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் “மறுப்பக்கத்தையும் கேளுங்கள்” ( ‘audi alteram partem’ ) என்று சவீன் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila