இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கும் அவ் நல்லாட்சியை ஏற்படுத்தி அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அச்சுறுத்தல் நிலைமை உருவாகி விடக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுக்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான அண்மைக் கால சந்திப்புக்கு முன்னதாகவே அச்சந்திப்பு குறித்து சந்திரிகா கவலை வெளியிட்டிருந்தார்.
தற்போது அச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா,கடந்த கால அரசின் ஊழல் மோசடிகளால், அடக்குமுறைகளால் அங்கு சிக்கித் தவித்த நாட்டு மக்களை மீட்டெடுக்க நாம் முன்னின்று போராடினோம்.
உயிர் அச்சுறுத்தல்கள் எமக்கு நேரடியாக விடுக்கப்பட்ட போதும் நல்லாட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என்ற முயற்சியில் நாம் பின்னிற்கவில்லை.பல போராட்டங்களைச் சந்தித்து நாட்டில் இன்று அனைத்து இன மக்களும் நல்லாட்சியின் சுதந்திர காற்றை சுவாசிக்க கூடிய வகையில் ஆட்சியை நிறுவியுள்ளோம்.
எனினும் தற்போது மக்களால் விரட்டப்பட்ட கடந்த அரசாங்கத்தில் செயற்பட்ட சிலர் தவறான அணுகு முறை வழிகளில் அரசியல் அனுகூலங்களை பெற முயற்சித்து வருகின்றனர்.
நல்லாட்சிக்கு எதிராக போக்கைக் கொண்ட நபர்கள் மீளவும் இப்புதிய அரசில் ஆட்சியை ஏதோவொரு வகையில் அமைக்க நினைப்பது நல்லாட்சிக்கு ஆபத்தானது.அது நல்லாட்சியை ஏற்றுக் கொண்டவர்களையும், நல்லாட்சியாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
எனவே அவர்கள் தொடர்பில் அதிக கவனத்துடன் புதிய அரசு முடிவுகளை எடுத்து நல்லாட்சியை தக்க வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்தார்.