கடந்த ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் மனுதாரர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இவ்வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
எனவே கர்நாடக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒருவேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், நான் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
குஜராத் கலவர வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை போன்று, அந்த அடிப்படையில் நான் மேல் முறையீடு செய்வேன் என டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் சுவாமி மேலும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது இறுதி தீர்ப்பு அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று உள்ளது. அது மனசாட்சி என்றும் கூறியுள்ளார்.