நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத்தேடியுள்ளனர்.. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
நீதி கோரி மாணவர்கள் போராட்டம்! புங்குடுதீவில் பதற்றம்!!
புங்குடுதீவு மகா வித்தியாலயஉயர்தர வகுப்பு மாணவியின் கொலைச்சூத்திரதாரிகள் பற்றி தகவல்கள் எதுவும் வெளிவந்திராத நிலையினில் நீதிகோரி சக மாணவர்கள் போராட்டத்தினில் குதித்துள்ளனர். காலை மாணவர்கள் ஒன்று திரண்டு வீதிகள் அனைத்தினையும் மூடி போராட்டத்தினில் குதித்திருந்தனர்.பின்னர் அவர்களிற்கு ஆதவாக பெற்றோர் ,ஊர்மக்கள் என பலரும் இணைந்து கொண்டு இச்செய்தி அறிக்கையிடப்படும் வரை நீதி வேண்டி போராட்டங்களை முன்னெடுத்தவண்ணமுள்ளனர்.குறிப்பாக நாகதீப என்றழைக்கப்படுகின்ற சிங்கள சுற்றுலாப்பயணிகளது வழிபாட்டு தலமான நயினாதீவிற்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அப்பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருப்பதுடன் பதற்றம் நீடிக்கின்றது.

நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத்தேடியுள்ளனர்.. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத்தேடியுள்ளனர்.. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
Related Post:
Add Comments