யாழில் வன்முறைகள் பெருகிவிட்டதால் ; விசேட அதிரடிப்படை மூலம் தேடுதல், கைதுகள் தொடரும் - பொலிஸ்மா அதிபர் பூஜித் திடீர் அறிவிப்பு


“வாள்வெட்டை நிகழ்த்தியது முன்னாள் போராளியே!” - பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத சம்பவங்கள், வன்முறைகள் கையைமீறி போய்விட்டது.

ஆகவே இவற்றை விரைந்து கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர், படையினர், கடற்படையினர் உட்பட அனைத்து பாதுகாப்புத் தரப்பினரையும் களமிறக்கி விசேட தேடுதல் (ஒப்பிரேசன்) மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி சட்டவிரோத சம்பவங்கள், குற் றச் செயல்கள் அனைத்தும் அடியோடு அழித் தொழிக்கும் வரை இந்த விசேட நடவடிக்கை தொடரும் என்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தகவல் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண சூழலை அடுத்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

இச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் கொக்குவில் நந்தா வில் பகுதியில் ஒரு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் மற்றொருவர் தமிழ் உத்தியோகத்தர் இருவரும் பணி நிமிர்த்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அதன்போது சிலர் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.

சக்தி வலு வாய்ந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர். ஒரு மோட்டார் சைக்களின் ஓட்டுநருடன் சேர்த்து மூன்று பேர் வீதம் இருந்தனர். திடீரென்று எந்தவொரு பேச்சுக்கும் இடமின்றி அவர்கள் பொலிஸாரை வெட்டினர்.

 இந்தத் தாக்குதலில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத் தரை தாக்கியபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவரின் இடது கையின் மேல் பகுதியில் கடுமையான காய ங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவருடன் சென்றவர் தப்ப முயன்றபோதும் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 வாள்வெட்டுக்கு இலக்கான இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக சிகிச்சைகள் தொடர்பில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

 இதேவேளை, பொலிஸாரைத் தாக்கியவர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் மட்டும் வரவில்லை. 6 தொடக்கம் 7 வரை யான மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 2 முதல் 3 பேர் வந்துள்ளனர். இவ்வாறு வந்தோர் 14 முதல் 15 வரையானவர்களாக இருக்கலாம்.

 இதனால் பொலிஸாரால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை. அவர்களிடம் இரு ந்து தப்பிக்கவே முயன்றுள்ளார்கள்.

 இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். அவர் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர். அத்துடன் ஆவா என்ற சமூகவிரோதக் கும்பலிலும் உள்ளார். சம்பந்தப்பட்ட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

 இந்த நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம், கடற்படையினர் உதவிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

 வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதி பாதுகாப்புப்பரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்படும்.

இவ்வாறான சம்பவங்கள் ஒன்றின்பின் ஒன்றாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதனை 
ஏற்றுக்கொள்ள முடியாது. 

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எமது கடமையாகும். அத்துடன் ஒவ்வொரு பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமையாகும்.

ஆகவே விசேட நடவடிக்கைகள், விசேட தேடுதல் நடவடிக்கைகளை நாங்கள் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் மேற்கொள்ள வுள்ளோம்.

இதன்மூலமே குற்றவாளிகளை கண்டறிந்து மக்களின் பாதுகாப்பையும் குறிப்பிட்ட பகுதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

குற்றவாளிகள் குற்றங்களுடன் தொடர்பு டையவர்கள் தேடிக் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படும் வரை எமது தேடுதல் நடவடி க்கைகள், விசேட பொலிஸ் நடவடிக்கைககளாக தொடர்ந்து இடம்பெறும்.

இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெ டுக்க நேர்ந்துள்ளமை குறித்து நாங்கள் மன் னிப்புக் கோருகிறோம்.

இந்த நடவடிக்கைளுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. ஏற்கெனவே ஊடகங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கின்றன. இவ்வாறான இறுக்க மாக நடவடிக்கைகளை எடுக்கும்போதுதான் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிசெய்ய முடியும்.

எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பொதுமக்களும் ஊடகங் களும் தங்கள் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் பொலிஸா ருக்கு தகவல்களைத் தெரிவிக்குமாறு கோருகின்றோம். 

யாராவது உங்கள் பகுதிகளில் ஆயுதங்களுடன். அல்லது சட்டத்துக்குப் புறம்பான கருவிகளுடன் இருந்தால் அது குறித்து அறிவியுங்கள்.

அது மட்டுமல்ல மது போதை அட்டகாசங்கள், போதைப் பொருட்கள் பாவனை, விற்பனை இவை போன்ற அனைத்து சட்டவிரோத செயற்பாடுகள் குறித்தும் தகவல்களை பொலி ஸாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சில பகுதிகளில் இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகையவர்கள் நிச்சயமாக எமது விசேட நடவடிக்கைகள் மூலம் அடக்கப்படுவார்கள்.

அவர்கள் குறித்த தகவல்களையும் தருமாறு பொதுமக்களைக் கோருகிறோம்.

எனது மற்றும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடைய இலக்கங் களை வழங்கியுள்ளேன். 

இந்த இலக்கங்களுக்கு நீங்கள் எந்த அச்சமும் இன்றி குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும்.

தகவல் தருபவர்கள் தொடர்பில் நிச்சயமாக இரகசியம் பேணப்படும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறேன். 

0717582222 என்ற என்னுடைய இலக்க த்திற்கோ அல்லது 0718592020 என்ற எனது பிரத்தியேகச் செயலாளரின் தொலை பேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.

வட மாகாணத்தில் விசேடமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள் சட்ட விரோத சம்பவங்களைப் கட்டுப்படுத்த எங்க ளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். விசேடமாக ஊடகங்கள் இந்த நடவடிக்கையில் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இந் தப் பகுதிகளில் இடம்பெறுவதை நாம் அனு மதிக்க முடியாது. ஒவ்வொரு மக்களதும் அவர்களின் சொத்துக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.

இதனை உறுதி செய்ய நாங்கள் முன்னெடுக்க உத்தேசித்துள்ள இந்த விசேட நடவடிக்கைகளுக்கு விசேட அதிரடிப் படையினர், படையினர், கடற்படையினர் உட்பட அனைத்து பாதுகாப்புத் தரப்பினரும் தேவை களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுவார்கள்.

நாங்கள் முன்னெடுக்கவுள்ள விசேட பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே.

இது தேசிய பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். 

இந்த நடவடிக்கைகளில் எந்த அரசியல் பின்புலமோ அல்லது இனத்துவ ரீதியான அழுத்தங்களோ, மொழி அல்லது சமய ரீதியான நடவடிக்கையாகவோ இருக்காது என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்றார் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila