மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சில மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா பிரேமசந்திர, அசாத் சாலி, மனோ கணேசன், எஸ்.எம். மரிக்கார் மற்றும் பிரசன்ன சோலங்காரச்சி ஆகியோருக்கு இவ்வாறு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.