வடக்கு மாகாண சபையினுடைய நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டுவர வேண்டும் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி. கடிதம் மூலம் வேண்டுகோள்


வடக்கு மாகாணத்தில் ஒரு தொகுதி முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவக் கட்டமைப்பின் கீழும் இன்னொரு பகுதி குறைந்த அளவு ஊதியத்துடன் பலர் ஊதியங்களுமின்றியும் வலயக்கல்வி பணிமனை நிர்வாகத் தின்கீழும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில் இராணுத் துணைப் படையின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் உள்ள விடயங்கள் வருமாறு

முன்பள்ளி ஆசிரியர்களின் நியமனம்.
கிளிநொச்சிமாவட்டம்.

கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களில் அரைப்பங்கினரை இராணுவத்துணைப் படையாக நியமித்து இராணுவநிர்வாகத்தின் கீழ் முன்பள்ளிகளில் கற்பிப்பதற்கு கட்டாயப்படுத்துவது தொடர்பில் 2015.01.28ஆம் திகதி கடிதம் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வடக்கு மாகாண கல்விநிர்வாகத்தின் கீழ் கிடைக்கும் என்ற அவாவுடன் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன்.

ஆனால் கடந்த2015.05.31ஆம் திகதி தங்களால் பொலநறுவையில் வைத்து இம்மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிவில் பாதுகாப்புதிணைக்களத்தின் துணைப்படைக் கட்டமைப்பின் கீழ் நிரந்தரநியம னங்களுக்கானகடிதங்கள் வழங்கப்பட்டிருப்பது கவலையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது

.தங்களது நல்லாட்சி அரசாங்கத்தில் நீங்கள் முன்னெடுத்துள்ள பல அணுகுமுறைகள் எமதுமக்கள் மத்தியில் தங்கள் மேல் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளநிலையில் இலங்கையில் எந்தமாவட்டத்திலும் இல்லாத ஒரு புதிய அணுகுமுறை கிளிநொச்சி,முல்லைத் தீவு,வவுனியா ஆகிய மாவட்டங்களில் மட்டும் எமது சின்னஞ்சிறு பாலர்களுக்கு கற்பிக்கின்ற முன்பள்ளிஆசிரியர்களுக்கு இராணுவத் திணைக்களத்தின் கீழ் நியமனம் வழங்குவது கடந்த அரசாங்கத்தின் இராணுவச் சர்வாதிகாரப்போக்கை மாற்றம் இன்றி அடையாளப்படுத்துவதுபோல் தமிழ் மக்கள் உணருகிறார்கள்.

உளவியல் ரீதியாக பாலர்கள் இயற்கையான சூழலில் மகிழ்ச்சியான கற்பித்தலைப் பெறவேண்டும்.

இவர்கள் இராணுவச் சூழலுக்கு கொண்டுவரப்படுதல் ஆபத்தானது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். முன்பள்ளி நிர்வாகம் என்பது வடக்குமாகாணசபைக்கு பகிரப்பட்ட அதிகாரத்தின் கீழ் உள்ள நிலையில் இராணுவப்பிடியில் முன்பள்ளிகளை நடத்துதல் கல்வி உளவியல் ரீதியாக மிக ஆபத்தானதாகும்.

அத்தோடு வடக்கு மாகாணத்தின் அதிகார, நிர்வாக நடவடிக்கைகளையும் இந்நியமனம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

எனவே பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய இராணுவப் பயிற்சியை நிறுத்தியமை, அதிபர்களுக்கு வழங்கிய இராணுவப் பதவிகளை மீளப்பெற்றமை, தங்களை உச்சமான ஜனநாயகத் தலைவராக காட்டியதுபோல், இம்முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதேசம்பளத்துடன் வடக்குமாகாண கல்வி நிர்வாக மேற்பார் வையின் அதிகாரத்தின் கீழ் நியமனம் கிடைக்க வேண்டுமென அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.                    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila