மோடிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த வெளிநாட்டு விளம்பர நிறுவனம் இலங்கை தேர்தலிலும்!

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வெளிநாட்டு விளம்பர முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைந்துள்ளன.
பல மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறித்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த தேர்தல் பிரச்சார பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக விஞ்ஞான ரீதியான தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைக்கு அமைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக இந்திய விளம்பர முகவர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை சென்றுள்ளனர்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகள் விசேடமான அறிவு திறனை கொண்ட இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்சார நிறுவனங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை கையாண்டுள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் தேர்தல் பிரச்சாரங்களை கையாண்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே இலங்கையை சென்றடைந்துள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரமானது பல வெற்றியை தந்ததுடன் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தையும் பெற்றுக்கொடுத்தது.
மோடியின் அமோக வெற்றியானது வெளிநாட்டு விளம்பர நிறுவனங்களை நோக்கி இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளையும் நகர்த்தியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila