வெலிக்கடை சிறையில் நடந்த கைதிகள் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய குழு அண்மையில் அதன் அறிக்கையை பிரதமர் மற்றும் நீதியமைச்சரிடம் கையளித்தது.
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியும் என்ற போதிலும் அரசியல் காரணங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படாதிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து தடையுத்தரவு ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.
எனினும் மனுவில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு வெளியில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தவோ, கைது செய்யவோ தடையில்லை என நீதிமன்றம் கூறியிருந்தது.
வெலிகடை சிறையில் கைதிகள் கொலை செய்யப்படும் சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவுக்கும் அந்த சம்பவத்துக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதால், அவர் குற்றவாளியாவது தவிர்க்க முடியாதது என சட்டத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனினும் மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்பட்ட மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதன் பின்னணி பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.