மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக் கொள்ள
முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் மரண
தண்டனை மீளவும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என
குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ஆட்சி செய்த அரசாங்கங்களுக்கும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்திடமும் அதனையே கோருவதாகவும் தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் சர்வதேச புகையிலைப்பொருள் பயன்பாட்டு ஒழிப்பு தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.இதற்கு முன்னதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் மரண தண்டனையை அமுல்படுத்த தயங்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மிக நீண்ட காலமாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து பேசப்பட்ட போதிலும் இதுவரையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை.
எவ்வாறெனினும், மரண தண்டனை விதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.