இலக்கத்தகடற்ற மர்ம வாகனம் முல்லை- பரந்தன் வீதியில் விபத்து! - படை அதிகாரி பலி

பரந்தன் -முல்லைதீவு வீதியில் அடையாளம் காணப்படாத வான் ஒன்று விபத்திற்குள்ளான  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவ்வாகனத்திலிருந்து படுகாயமடைந்த படை அதிகாரியொருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். எனினும் இது வரை சடலம் உரிமை கோரப்படாது வைத்தியசாலையினில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 44 வயதுடைய படை அதிகாரியை அனுமதித்தவர் பின்னர் தப்பித்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இலக்கத்தகடற்ற குறித்த வான் நேற்றிரவு விபத்திற்குள்ளாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வாகனம் இன்று மதியம் தாண்டியும் மீட்கப்படாது அநாதரவாக வீதியோரத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது. படைத்தரப்பு வசம் பயன்பாட்டிலிருந்த இலக்கத்தகடற்ற வான் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila