பிரித்தானியாவின் புதிய குடிவரவு சட்டத்தின் படி, ஆறு வருடங்கள் தங்கி இருந்து, வருடாந்தம் 35 ஆயிரம் பவுண்களை சம்பாதிக்க முடியாத ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.
இதன்படி ஆயிரக் கணக்கான தாதியர்களை அந்த நாட்டின் அரசாங்கம் வெளியேற்றவுள்ளது.
இதில் இந்தியா, சிறிலங்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாதியர்கள் பாதிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு தாதியர் கல்வி சாலைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.