சரணடைந்த போராளிகளைக் கொலை செய்ய வேண்டாமெனவும், அவர்கள் அப்பாவிகள் எனவும் நான் மகிந்தவிடமும் கோத்தாவிடமும் கெஞ்சியிருந்தேன். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை. புலித்தலைமையை அழித்தது பெரிதல்ல. ஆனால் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த சம்பவம் எனக்குப் பொறுக்க முடியாது இருந்தது. பிரபாகரனின் இளைய மகனைக் கொல்ல வேண்டாம் என நான் கூறிய போதும் அவனும் கொல்லப்பட்டான். புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கிறார்கள்’ எனவும் தெரிவித்தார். எனினும் அவர்கள் என்னை இப்போது மறந்து விட்டனர். எனக்கு இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்காமல் என்னை புறக்கணித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். |
மஹிந்தவும் கோத்தபாயவும் கொடூரமானவர்கள் என்பது இறுதி யுத்தத்தின் பின்னரே கருணாவுக்குத் தெரிந்ததாம்!
Related Post:
Add Comments