சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கருணா போலி கடவுச்சீட்டில் இங்கிலாந்து சென்றதன் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறினாரா என்பது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சீ.ஐ.டி.யினருக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கருணா அம்மானின் சொந்தப் பெயரான விநாயகமூர்த்தி முரளிதரன் (அடையாள அட்டை இலக்கம்- 66312346V) மற்றும் அவர் போலி கடவுச்சீட்டு பெறப் பயன்படுத்தி துஷ்மந்த குணவர்த்தன (அடையாள அட்டை இலக்கம்- 611405138V) ஆகிய பெயர்களில் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் அளிக்குமாறு இலங்கையின் ஏழு நிதி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டை தயாரிப்பதில் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளதாக பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை வௌிநாட்டு அமைச்சின் உதவியுடன் முன்னெடுக்குமாறு நீதிபதி லால் ரணசிங்க பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். |
கருணாவுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு - விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
Related Post:
Add Comments