பிரபாகரனின் பிராடோ வாகனத்தை பயன்படுத்திய இராணுவ அதிகாரி விசாரணையில் சிக்குகிறார்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய  பிராடோ வாகனத்தை, இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மீரிஹான பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளின் போதே பிரபாகரனின் வாகனம் பயன்படுத்தப்பட்ட விவகாரம் அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்ட நடைமுறைகளின் படி, படையினர் வாகனங்களை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் ஒப்படைத்து, பதிவு செய்த பின்னரே மீளப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இவ்வாறு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்று விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விசாரணைகளின் போதே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணைகளை அடுத்து, இராணுவ அதிகாரிகள் பலர் குழப்பமடைந்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila