ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை உடனடியாக கிடைக்காமல் போகலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது
ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டேவிட் டெலி இதனை தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைமீறல் விடயங்கள் இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் வர்த்தகத்துறையினர் மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையின் உள்ளுர் பிரச்சினைகள் தொடர்பில் பிரசல்ஸில் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீது அண்மையில் பொலிஸார் நடத்திய தாக்குதல், திருகோணமலையில் இலங்கை கடற்படையினரின் இரகசிய வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்டமை போன்ற சம்பவங்களை அவர் கோடிட்டுக்காட்டினார்.
இந்த வருட ஆரம்பத்தில் வதை முகாம் பற்றி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான குற்றச்சாட்டை மறுத்தார்.
எனினும் திருகோணமலையில் வதை முகாம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதை டேவிட்டெலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தவிடயம், ஐரோப்பிய அரசாங்கங்கள் மத்தியில் கலந்துரையாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்பி பிளஸ் என்றதும் டீசேர்ட் மற்றும் ஏற்றுமதி பொருட்களை பற்றி இலங்கை அரசாங்கம் எண்ணிக்கொண்டிருக்கிறது.
எனினும் தம்மை பொறுத்தவரை, ஜிஎஸ்பி பிளஸ் சித்திரவதை, ஊடக சுதந்திரம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஏனைய சூழல் பிரச்சினைகளாகும் என்று டெலி குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila