
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை ஆனால் வடமாகாணசபையால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பிரேரணையை ஐநா எவ்வாறு ஏற்றுக்கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சர்வதேச விசாரணை குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை இறைமையுடைய நாடு சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது இன்நிலையில் மாகாணசபை ஒன்று சுட்டிக்காட்டிய விடயத்தை சர்வதேச அரங்கில் பெரியதோர் அமைப்பாக செயற்படும் ஐநா எவ்வாறு இனவழிப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
அமெரிக்காவின் தேவைக்காக கொண்டுவரும் இவ் விசாரணை நடவடிக்கையை அறிந்துகொண்ட சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முன்னர் எதிர்திருந்தமையை உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் தற்போது நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் விசாரிக்கப்படவேண்டிய முறைகேடுகள் ஏராளம் காணப்படுவதாக தெரிவித்தார்.
சந்திரிக்காவினது ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் விசாரணை செய்யப்பட வேண்டியவர் என்றும் தெரிவித்தார்.
கட்டங்கட்டமாக இடம்பெறும் விசாரணைகளில் சந்திரிக்கா மற்றும் மங்களசமரவீர போன்றோரும் உள்ளக விசாரணைக்கு அமைவாகவே விசாரிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
வடமாமாகாணசபையால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பிரேரணையை ஐநா ஏற்கவேண்டாம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் தன்னால் நிரூபிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாதென தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.