
இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் எதிர்வரும் 24ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள யோசனைக்கு பல மேற்கத்தேய நாடுகள் ஆதரவு வெளியிட்டுள்ளன.
இதற்கமைய கடந்த வருடம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குள் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளும், கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக தமது வாக்குகளைப் பயன்படுத்திய மேற்கத்தேய நாடுகள் சிலவும் இம்முறை ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசேடமாக தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவான யோசனைக்கு சார்பாக செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது.
இறுதிக் கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்து தேடியறிவதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவாக அமெரிக்கா எதிர்வரும் 24ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.