வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமாயின், 1983 ஆம் ஆண்டு ஜூலையில் நிகழ்ந்த இனப்படுகொலையின் பின் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்த போது உயிருக்குப் பயந்து இந்தியாவில் ஒதுங்கியவர்தான் இந்த வழக்கறிஞர். சிறி லங்கா நீதி மன்றங்களில் வர்த்தக சம்பந்தமான வழக்குகளை மாத்திரம் கையாண்டவர். அதாவது இருபத்தையாயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம்(Jurisdiction) வர்த்தக நீதிமன்றத்திற்கே உண்டு. பின்னர் அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இணைய Internet சட்டத்தில் முதுமாணிக் கற்கை நெறியையே மேற்கொண்டவர். பொது அறிவினூடாக இவர் சர்வதேச சட்டங்களை தெரிந்து வைத்துள்ளார் என எடுத்துக் கொண்டாலும் அதை பிரயோகிக்கவோ, அது பற்றிய நிபுணத்துவ கருத்துக்களையோ இவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. மிகவும் எளிமையாகச் சொன்னால் இவரால் “உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது”
இனப்படுகொலை(Genocide), மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்(Crimes against humanity), போர் குற்றங்கள்(War crimes) என்பவற்றை சர்வதேச சட்டங்கள் மாத்திரமே வரையறுக்கிறது. சாதாரண சிறி லங்கா குற்றவியல் கோவையின் (Penal Code) அடிப்படையில் இக்குற்றங்களுக்கான தண்டனை வழங்க முடியாது. இக்குற்றங்களை விசாரிக்கும் நியாயாதிக்கம் சிறி லங்காவின் எந்தவொரு நீதி மன்றத்திற்கும் கிடையாது. சிறி லங்கா இராணுவச் சட்டம் (Sri Lankan Army Act) இராணுவ நீதிமன்றை (Court of Martial) அமைத்து மிக அடிப்படையான குற்றங்களை மாத்திரம் விசாரிக்கும், தண்டனை வழங்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டவை. அதையும் மேலதிகாரம் செய்யும் உரிமை சிறி லங்கா நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உண்டு.
முன்னாள் இராணுவத் தளபதியும் இன்றைய அரசியல் வாதியுமான சரத் பொன்சேகாவுக்காக அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியது. ஆனால் இன்று அவர் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவால் பீல்ட் மார்ஷல் Field Marshal என்ற அதி உயர் இராணுவ நிலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சிறி லங்கா இராணுவச் சட்டம் (Sri Lankan Army Act) மற்றும் இராணுவ நீதிமன்றம் (Court of Martial) என்பவற்றை விளங்கிக் கொள்ளக் கூடிய நகைப்புக்கிடமான மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று (International Criminal Court) பற்றி வரையறுக்கும் ரோம் உடன்படிக்கையில்(Rome Statute) ஆறாம், ஏழாம், எட்டாம் சரத்துக்கள் முறையே இனப்படுகொலை(Genocide), மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்(Crimes against humanity), போர் குற்றங்கள்(War crimes) என்பவற்றை வரையறுக்கிறது. ரோம் உடன்படிக்கையில் சிறி லங்கா கைச்சாத்திடவில்லை எனவே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்த முடியாது என்று வியாக்கியானம் செய்யும் சில மேதாவிகளும் நம் மத்தியில் இருக்கிறார்கள். ரோம் உடன்படிக்கையில்(Rome Statute) அமெரிக்கா கூடக் கைச்சாதிடவில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறும் இவர் அடிப்படை சட்ட விடயங்களில் கூட முரண்படுகின்றார். அதாவது ஒரு சிறு உதாரணம்: ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு அவளது அறையில் கிடந்ததாக எடுத்துக் கொள்வோம். சந்தேகத்தின் பேரில் ஒரு ஆண் கைது செய்யப்படுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அங்கு சான்று ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது சட்ட அமுலாக்கல் அமைப்பைச் சார்ந்தது. ஒரு கொலையில் பல குற்றங்கள் நிகழ்ந்து இருக்க முடியும். அதாவது ஒரு வன்புணர்வு இடம்பெற்று இருக்கலாம், கொடூரமான ஆயுதங்கள் மூலமான தாக்குதல் இன்னும் பிற பல இடம்பெற்று இருக்கலாம். நடந்த கொலை தொடர்பான விசாரணையில் மற்றைய குற்றங்களும் நிகழ்ந்ததா?? என்பதை விசாரிக்க வேண்டிய கடப்பாடு நீதிமன்றத்திற்கு உண்டு. வெறுமனே கொலையை மாத்திரம் விசாரணை செய்ய முடியாது என்பது அடிப்படை நீதி நடைமுறை.
எனவே ஐ.நா. அறிக்கைகளின்படி இறுதிச்சமரில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று எடுத்துக் கொள்வோம். நடந்தது இனப்படுகொலையே என நிரூபிப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
1. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள்
2. கொலையில் ஈடுபட்டது தனிச்சிங்கள இராணுவம்
3. பொது மக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டார்கள்
4.அங்கு போரில் சிக்கியிருந்த பொது மக்களின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்பட்டது
5.சாட்சியற்ற ஒரு படுகொலையை நிகழ்த்தும் நோக்குடன் மனிதநேய அமைப்புக்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டமை
6. உணவும்,மருந்தும் மறுக்கப்பட்டமை
7.போர் கைதிகள் கொலை செய்தலில் ஒரு ஒழுங்கு முறை – Systematic Process பிரயோகிக்கப்பட்டமை
8.போர் கைதிகள் ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே எதிர் தரப்பினரை நோக்கி வந்தனர் மனித நேய நோக்கம் மாத்திரமே இருந்தது
9. கன ரக ஆயுதங்கள் உறுதி மொழியையும் மீறி பிரயோகிக்கப்பட்டமை
10.இப்படுகொலைகளுக்கு ஒரே சாயலிலான நீண்ட வரலாறு
2. கொலையில் ஈடுபட்டது தனிச்சிங்கள இராணுவம்
3. பொது மக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டார்கள்
4.அங்கு போரில் சிக்கியிருந்த பொது மக்களின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்பட்டது
5.சாட்சியற்ற ஒரு படுகொலையை நிகழ்த்தும் நோக்குடன் மனிதநேய அமைப்புக்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டமை
6. உணவும்,மருந்தும் மறுக்கப்பட்டமை
7.போர் கைதிகள் கொலை செய்தலில் ஒரு ஒழுங்கு முறை – Systematic Process பிரயோகிக்கப்பட்டமை
8.போர் கைதிகள் ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே எதிர் தரப்பினரை நோக்கி வந்தனர் மனித நேய நோக்கம் மாத்திரமே இருந்தது
9. கன ரக ஆயுதங்கள் உறுதி மொழியையும் மீறி பிரயோகிக்கப்பட்டமை
10.இப்படுகொலைகளுக்கு ஒரே சாயலிலான நீண்ட வரலாறு
இன்னும் பிறபல….
இங்கே குறிக்கப்பட்ட விடையங்களை இனப்படுகொலை சட்டத்துடன் ஒப்பிடுகையில் அது ஒரு இனப்படுகொலையே என்பதை இலகுவில் நிரூபிக்க முடியும். ‘இனப்படுகொலை’ என்ற பதம் 1944 ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இனப்படுகொலை என்ற பதத்தினை அறிமுகம் செய்தவர் போலந்து – இஸ்ரேல் சட்டத்தரணி ராபெல் லெம்கின் ஆவார்.
‘இனப்படுகொலை குற்றம் என்றால் என்ன’???? என்பதை ஆங்கிலத்தில் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்கள்.
THE CRIME OF GENOCIDE On December 9, 1948, the United Nations approved the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. This convention establishes “genocide” as an international crime, which signatory nations “undertake to prevent and punish.” It defines genocide as:
[G]enocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:
(a) Killing members of the group;
(b) Causing serious bodily or mental harm to members of the group;
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
(d) Imposing measures intended to prevent births within the group;
(e) Forcibly transferring children of the group to another group.
(a) Killing members of the group;
(b) Causing serious bodily or mental harm to members of the group;
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
(d) Imposing measures intended to prevent births within the group;
(e) Forcibly transferring children of the group to another group.
While many cases of group-targeted violence have occurred throughout history and even since the Convention came into effect, the legal and international development of the term is concentrated into two distinct historical periods: the time from the coining of the term until its acceptance as international law (1944-1948) and the time of its activation with the establishment of international criminal tribunals to prosecute the crime of genocide (1991-1998). Preventing genocide, the other major obligation of the convention, remains a challenge that nations and individuals continue to face.
அதாவது 1989 ஆம் ஆண்டு முதல் சிறி லங்காவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு(International Committee of Red Cross-ICRC) செயற்பட்டு வருகிறது. இது சர்வதேசச் சட்டங்களினடிப்படையில் போர் நிகழுகின்ற இடங்களில் பொது மக்கள், போர் கைதிகள்(Prisoners of War) மற்றும் பொது மக்களுக்கான மனித நேய உதவிகளுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு. இது எந்த சட்டத்தின் அல்லது ஒப்பத்தந்தின் அடிப்படையில் சிறி லங்காவில் செயற்பட்டு வருகின்றது??? யாராவது கூற முடியுமா????
இன்னுமொரு வகையில் கூறுவதாயின் தமிழர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்கான முயற்சி கடந்த 67 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? என்பதை ஒரு சர்வதேச விசாரணை ஒன்றினூடாகத்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு அமைப்பு மாத்திரமோ தீர்மானிக்க முடியாது. தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், உணர்வாளர்கள் பல தடவைகள் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தி இருக்கிறார்கள். முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் முதலமைச்சராக அணி செய்யும் வடக்கு மாகாண சபையில் ‘இனப்படுகொலை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்ட சபையும் அண்மையில் அதே முடிவை எடுத்து இனப்படுகொலை தீர்மானத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்த விடையத்தில் ஆணித்தரமாக இருக்க வேண்டும். அதை விடுத்து தமிழர்களின் செய்தியை தவறாக சர்வதேச அரங்கில் கொண்டு செல்வார்களாயின் முடிவு எதிர் மறையாகவே இருக்கும் என்பது மாத்திரமல்ல மேலுமொரு ‘வரலாற்றுத் துரோகமாக’ அமைந்து விடுவது தவிர்க்க முடியாதது.
எனது கருத்தின்படி தமிழர்கள் சர்வதேச சட்ட வல்லுனர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை அமைத்து அனைவரும் செயலின்றிய விமர்சனங்களைத் தவிர்த்து பொருளாதார ரீதியாவும், தார்மீக ரீதியாகவும் பங்களிப்புகளை வழங்கி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். உதாரணமாக Channel 4 ஊடகம் ஆற்றிய பங்களிப்பின் ஒரு சிறு அளவையேனும் நாம் இது வரை செய்யவில்லை என்பதை வேதனையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சிறு உதாரணம், நாங்கள் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறுவதானால் ஆகக் குறைந்தது அவர்கள் அனைவரதும் பெயர் விபரங்களையாவது ஒருங்கிணைந்த வகையில் நாம் திரட்டி வைத்து இருக்கிறோமா??? என்பது கேள்விக்குறியே!! இவ்வாறான எம்மிடம் இருக்கக் கூடிய பலவீனங்களை எதிரி பயன்படுத்துவதற்கு நாம் இடமளிக்க முடியாது. “விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி” தமிழர்கள் எங்கு எந்த மூலையில் வாழ்ந்தாலும் நீதி கோரிக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. ‘எல்லாமே நடந்து முடிந்து விட்டது இனி எதுவுமே நடக்காது’என ஒட்டு மொத்தத் தமிழர்களும் இன்றிருப்பது வேதனையளிக்கிறது. இதே நிலை உலகில் வேறு ஒரு இனத்திற்கு ஏற்பட்டு இருப்பின் அவர்கள் விட்டு வைத்து இருக்க மாட்டார்கள். தடைகளை இலக்குகளாக்கி, பின்னடைவுகள், தோல்விகளில் இருந்து பெற்ற பட்டறிவுகளினூடாக முற்றிலும் அறிவு பூர்வமாகப் பயணிக்க வேண்டிய காலமிது.
முடிவாக, சட்டத்தரணி மக்கள் பிரதிநிதி எம்.ஏ . சுமந்திரனுக்கு ஒன்றைக் கூறுவது இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அதாவது ஒருசட்டத்தரணியாக முன்னர் அவர் ஒரு பௌதிகவியல் பட்டதாரி. எனவே”எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்கின்ற நியூட்டனின் இரண்டாம் விதியை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வருவது மிகவும் நன்மை பயக்கும்.
-திரு ஜெயரத்தினம் உருத்திரகுமார்