சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், 44 அமைச்சுக்களுக்கான புதிய செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி. அபேகோன், அமைச்சுக்களின் புதிய செயலர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இதன்படி, நியமைச்சின் செயலராக கலாநிதி சமரதுங்கவும், வெளிவிவகார அமைச்சின் செயலராக சித்ராங்கனி வகீஸ்வராவும், பாதுகாப்பு அமைச்சின் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலர்களில், நான்கு பேர் மாத்திரமே தமிழ்பேசும் சமூகத்தினராவர். இவர்களில் மூவர் தமிழர்கள் என்பதும், ஒருவர் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமயவிவகார அமைச்சின் செயலராக சி.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாணசபையின் பிரதம செயலராக பதவி வகித்த போது, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பனிப்போர் நடத்தியவரான விஜயலட்சுமி ரமேஸ், தொழில்நுட்ப, தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலராக இருந்த, ரஞ்சினி நடராஜபிள்ளை மலையக, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கொள்கைத் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலராக எம்.ஐ.எவ்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
Add Comments