
புலம்பெயர் உறவுகளின் ஏற்பாட்டிலேயே கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். அது திரிபுபடுத்தப்பட்டது. புலம்பெயர் உறவுகள் எமது இரத்த உரித்துக்களே. சர்வதேச விசாரணை கோரும் போராட்டம் தாயகத்திலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டுமென்ற எண்ணப்பாடடில் தன்னார்வ செயற்பாடாக முன்னெடுக்கப்படுகின்றதென தெரிவித்துள்ளார். சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் தலைவரும் யாழ்.பலக்லைக்கழக கலைப்பீடாதிபதியுமான வி.பி.சிவநாதன். கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும் கையெழுத்துபோராட்டத்தினை யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மாறி மாறி ஆட்சியேறிய தெற்கு அரசுகள் தமது மனம் போன போக்கில் செயற்பட்டு தமிழர்களை ஒடுக்கியே வந்துள்ளன. அதனால் சர்வதேச மத்தியத்தின் கீழான தீர்வே தமிழ் மக்களிற்கு நிரந்தர தீர்வாக அமைய முடியுமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.