பிரான்ஸ் அவசரகால நிலை! அனைத்து எல்லைகளும் மூடல் - (2ம் இணைப்பு)

பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்குள் புகுந்துள்ள ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதல்களை அடுத்து அங்கு தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரான்சுக்கான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படாக்லன் கலை காட்சியகத்தில் 60 பேரை ஆயுததாரிகள் பணையக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளதை அடுத்து அவர்களை விடுவிப்பதற்காக பிரான்ஸ் படையினர் பாரிய படை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.

பாரிசில் தொடர் தாக்குதல்கள் – 60 பேருக்கு மேல் பலி, 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இன்றிரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸ் நகரில் உள்ள மூன்று உணவகங்கள், ஒரு கலையரங்கு, தேசிய விளையாட்டு மைதானம் அருகேயுள்ள மதுபானசாலை அகிய இடங்களில் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
rue de Charonne உள்ள உணவகம் ஒன்றிலும், Bataclan arts centre என்ற கலையரங்கிலும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
11ஆவது மாவட்டத்தில் உள்ள Petit Cambodge restaurant உணவகத்தில் ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு வெளியே 10இற்கும் அதிகமானவர்களின் சடலங்கள் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு 100இற்கும் அதிகமான துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், இதில் 6 பேர் தொடர்புபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது,

கலையரங்கினுள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த சுமார் 60 பேரை பயணக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். அங்கு 15 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தேசிய விளையாட்டரங்கிற்கு வெளியில் உள்ள மதுபானசாலைப் பகுதியில் மூன்று குண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, பிரான்ஸ் ஜேர்மனி அணிகளுக்கிடையிலான உதைபந்தாபட்டப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். எனினும், போட்டி திட்டமிட்டவாறு தொடர்ந்து இடம்பெற்றது.
இந்த தொடர்தாக்குதல்களை அடுத்து நள்ளிரவுக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர்  அவசர நிலை பிரகடனத்தை் வெளியிட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் தப்பிச் செல்லமுடியாதவாறு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பாரிசில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளே இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila