உயிர்களைப் பறித்த முள்ளிவாய்க்காலில் உறவுகள் அஞ்சலி!

452ae3df-d39a-4d6d-9d48-ab6365e98c09

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு, அவர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மே-18 நினைவு நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது, பொது நினைவிடத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இறுதி யுத்தத்தை நினைவு கூரும் வகையில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சியும் வழங்கப்பட்டது.452ae3df-d39a-4d6d-9d48-ab6365e98c09
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila