கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று(புதன்கிழமை) யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.