கடந்தகால தவறுகளுக்கு சிங்கள தலைவர்களும் பொறுப்பு. வடக்கு கிழக்கு போராட்டங்கள் அந்த மக்களின் குரல்

கடந்தகால தவறுகளுக்கு சிங்கள தலைவர்களும் பொறுப்பு. வடக்கு கிழக்கு போராட்டங்கள் அந்த மக்களின் குரல்-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடந்த போராட்டங்கள் தவறானவை அல்ல என்றும் அது அந்தப் போராட்டத்தை அம் மக்களின் குரலாகவே கருத வேண்டும் என்றும் தூய்மைக்கான நாளை அமைப்பின் தலைவர் அத்துலிய இரத்தினதேரர் தெரிவித்துள்ளார்.

அப்பாவித் தமிழர்கள் தண்டிக்கப்படாது உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலத்தில் நிலவியதைப் போன்ற சூழ்நிலை இப்போது இல்லை என்றும் அதனால் கைதிகளை விடுவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு சிங்களத் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவசியமான உரிமைகளை வடக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என்றும் அத்துலிய இரத்தினதேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல இழப்புக்கள அதன் ஊடாக தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக அரசியல் மிகவும் மொசமான முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மதக் கலவரங்களையும் இன வன்முறைகளையும் தோற்றுவிக்கும் வகையில் இலங்கை அரசு மிகவும் மோசமாக நடந்து கொண்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களை எதிரிகள் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டதாகவும் கூறினார்.

இதேவேளை கடந்த அரசாங்கம் யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் தொடர்பிலும் அரசு எதையும் செய்யவதாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத அப்பாவி தமிழ் கைதிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களை விடுவிக்க கோரும் வடக்கு கிழக்கு மக்களின் போராட்டம் அவர்களின் குரல் என்றும் அதனை எவரும் குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறினார்.

புதிய அரசாங்கம் சரியாக இதனை அணுக வேண்டும் என்று கூறிய அவர் தமிழர்களை ஒர விதமாகவும் சிங்களர்வகளை ஒருவிதமாகவும் கவனிக்ககூடாது என்றும் அனைத்து மமக்களும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila