வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
‘வட மாகாண முதலமைச்சரை நீக்குமாறு கோரும் விடயத்தில் நான் அவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படமாட்டேன். அது கட்சியின் நிலைப்பாடு. அமைச்சரவையை மாற்ற வேண்டும் என சுமார் 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வாயிலாக அறிந்தேன். அந்த விடயத்தில் நான் நடைபெறும் விடயங்களை அவதானிப்பனாக இருப்பேனே தவிர, சரி பிழை தொடர்பில் கருத்துத்தெரிவிக்க மாட்டேன். இதுவே எனது பதவிக்குரிய நிலைப்பாடு ஆகும்’ என்றார்.
உண்மையில் சீ.வியை நீக்க வேண்டும் என்னபதில் மாவை சுமந்திரன் கூட்டணியில் சீ.வி.கே காரணம் பல திருட்டுகளுக்கு சீ.வி தடையாக இருப்பது பலரது வயிற்றில் அடிப்பதாக உள்ளது அவர்களது செயற்பாட்டில் அறிய முடிகிறது.
அதனால் சீ.வியை அகற்றுவதில் பலர் தீவிரம் அதில் கொழும்பில் உள்ள மூன்று திருடனுடடுனும் சீ.வி.கேயும் மாகா தீவிரம்.
Add Comments