இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி பாடசாலை மாணவன் ஒருவன் புகைவண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்திருந்தான்.
இந்நிலையில் குறித்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் பல்கலைக்கழக வாயில் வரை வந்து பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Related Post:
Add Comments