இன்று காலை யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரன் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் பாய்ந்து தனது உயிரை நீத்தார். அவரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார். தனது உயிரை தியாகம் செய்த அந்த மாணவனுக்கு இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் கைதிகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவனின் தியாகத்திற்கு ஒவ்வொரு தமிழர்களின் வாசஸ்தலத்திலும், கல்வி நிலையத்திலும், தொழில் நிறுவனங்களிலும் கறுப்பு கொடி ஏற்றி, தீபமேற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்துமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்த தியாகவீரன் போன்று இனியும் பிறிதொரு உயிர் இழப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பல வேதனைகளைச் சுமந்து சிறைக்குள் வாடும் நாம், மீள முடியாத துன்பத்திற்குள் தள்ளப்பட்டு விட்டோம். எமது மக்களின் ஒவ்வொரு இழப்பிலும், புன்னகை விட இருக்கும் ஒரு சில சிங்கள அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை எமது தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வினையும், எமது ஒரு சில உயிர் தியாகங்கள் மூலம் பெற்றுவிட முடியாது. அத்துடன், ‘எமக்கான நிரந்தர தீர்வினைப் பெற வேண்டுமாயின், மாபெரும் மக்கள் புரட்சியின் மூலமே சுதந்திர வாழ்வினைப் பெற முடியும்’ என்றும் இலங்கை அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். |
உயிர்துறந்த மாணவனுக்காக தீபமேற்றி கறுப்புதினமாக அனுஷ்டிக்க அரசியல் கைதிகள் கோரிக்கை!
Add Comments