மேலும் இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்நிகழ்வை தவற விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.நடப்பு ஆண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படும்.
சந்திரனை ஆராயும் நாசாவின் (Lunar Reconnaissance Orbiter- LRO) பணி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. எல்ஆர்ஓ பணி மூலம் அதிக திறன்வாய்ந்த 7 கருவிகள் மூலம் நிலா குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் கிறிஸ்துமஸ் நாளன்று நிகழும் அரிய நிகழ்வும் ஆராயப்படும் என நாசா அறிவித்துள்ளது. அந்த அதிசய நிகழ்வு கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 11.11 மணிக்கு முழு உச்சத்தை அடைந்து பிரகாசமாக காட்சி அளிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.