குறித்த விசாரணைகளானது யாருடைய தலையீடுகளோ, அழுத்தங்களோ இன்றி சுயாதீனமாக நடைபெறவேண்டும் எனவும், அதற்கு இந்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர், விசாரணைகளின் போது யாருக்காவது அநீதி ஏற்பட்டிருக்குமானால் அது குறித்து நீதிமன்றின் உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஊடகவியலாளர் பிரகீத் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் அடிப்படையில் கடத்தப்பட்டதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்ற நிலையில், அது ஊர்ஜிதப்படுத்தப்படுமானால் கோட்டா கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பல ஊடகச் சந்திப்புக்களை நடாத்தி விசாரணைகளக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதனால், குறித்த விசாரணையை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஒத்துழைப்புகளை வழங்குமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் அரசியல் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை ராஜபக்ஷ ஆதரவாளர்கள் சென்று சந்தித்து வருவதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சிறைக்கு சென்று அவர்களை சந்தித்து நலன் விசாரரித்தார்.
இவ்வாறான சந்திப்புக்கள் மூலம், ராஜபக்ஷ தரப்பினர் குற்றவாளிகளை காப்பற்ற முயற்சிப்பது தெளிவாவதாகவும், இதனை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அரசியல் தலைவர்களும், அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.