மேலும், பெண் ஒருவர் குறித்து செய்திகளை வெளியிட்டது தொடர்பாக, சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. அவரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் முளைத்த சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான, திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றதோடு, பல பெண்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு, அவர்கள் தொடர்பான அவதூறுச் செய்திகளை தரவேற்றி வருகின்றன. இவ்வாறு போலியான சம்பவங்களை உருவகித்துச் செய்தி வெளியிடும் சட்டவிரோத இணைய விஷமிகளைக் கைது செய்ய தமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு இயங்கும்இணையப் பக்கங்களையும் சட்டவிரோத நபர்களையும் தமக்கு அடையாளம் காட்டுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.