இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் வி.கே.சிங், ஜெனரல் பிக்ரம் சிங் ஆகியோரும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதிலும் ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கின் இந்தப் பயணம் தான் கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இலங்கைக்கு வந்திருப்பது இதுதான் முதல் தடவை.
ஆனால் அவர் இராணுவ அதிகாரியாக இலங்கைக்கு ஏற்கனவே வந்திருக்கிறார்.
இம்முறை அவர் ஐந்து நாட்களே தங்கியிருந்தார். ஆனால் முன்னர் அவர் இரண்டு ஆண்டுகள் வரை தங்கி போரிட்டிருந்தார்.
கூர்க்கா படைப் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் 1987ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய அமைதிப் படை ஆரம்பித்த போது டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரது படைப் பிரிவு புலிகளின் தாக்குதலில் கடுமையான சேதங்களை சந்தித்து இருபது பேரை இழந்ததையடுத்து உடனடியாக ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் தாமாக விரும்பி இலங்கை வந்தார்.
அதற்குப் பின்னர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் அவர் ஒரு கொம்பனி கொமாண்டராக இருந்து இரண்டு ஆண்டுகள் வரை விடுதலைப் புலிகளுடன் போரிட்டிருந்தார்.
ஒரு போரிடும் அதிகாரியாக அப்போது வந்திருந்த ஜெனரல் சுஹக் இப்போது இந்திய இராணுவத் தளபதியாக வந்திருந்தார்.
புதுடில்லியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மற்றும் கொள்கை மாற்றங்கள் என்பன ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கின் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறக் காரணம்.
இவர் கொழும்பு புற்ப்படுவதற்கு முன்னதாக இலங்கையுடன் பரந்தளவிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பான விடயம், புதுடில்லியின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் ரைம்ஸ் வெளியிட்டிருந்து செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
இந்த பரந்தளவிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்கும் திட்டத்துக்கான திறவுகோலாகவே இந்திய இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இலங்கையின் போர்த்தளபாடங்களை தரமுயர்த்துவது தொடர்பாக இவர் பேசவுள்ளதாகவும், இது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டால் அது இலங்கை தொடர்பான இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை மாற்றியமைக்கப்படுவதாக இருக்கும் என்றும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
இலங்கைக்கு அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்பதில்லை என்ற ஒரு கொள்கை புதுடில்லியால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதான நம்பிக்கை பொதுவாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஆயுதங்களால் இலங்கைப் படைகளுக்கு இந்தியா ஆயுதங்களை விற்பதில்லை என்று கூறப்பட்டாலும், புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் பயன்படுத்தப்பட்ட பல போர்த் தளபாடங்கள் இந்தியாவிடமிருந்தே கிடைத்தவை என்பதில் சந்தேகமில்லை.
அந்தக் காலகட்டத்தில் இலங்கைக் கடற்படைக்கு சயுர, சாகர என்ற இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இந்தியா வழங்கியிருந்தது. அவை கடல்வழி முற்றுகையில் முக்கிய பங்காற்றியிருந்தன.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தடுப்பதற்கான இந்திரா ரக ரேடர்களையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் இந்தியாவே வழங்கியிருந்தது.
அதுதவிர வேறு பல இரகசிய உதவிகளை இந்தியா வழங்கியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் அதனை இந்தியா மறுத்து வந்திருக்கிறது.
எனினும் கடற்படைக்கு வழங்கிய போர்க் கப்பல்களையோ விமான எதிர்ப்பு ரேடர் மற்றும் பீரங்கிகளையோ தற்காப்பு சாதனங்களாகவே இந்தியா விபரித்திருந்தது.
இந்தியாவின் இந்தப் போர்த் தளபாடங்கள் புலிகளுக்கு எதிரான போரில் முக்கியமான பங்கை வகித்திருந்தன.
இப்போது புதுடில்லி மீது தமிழ்நாடு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலை இல்லை என்பதால் இலங்கைக்கு ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை வழங்க இந்தியா தயாராகி வருகிறது.
அதற்கான ஒரு முன்னோட்டமாகவே இந்திய இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம் அமைந்திருந்தது.
இலங்கையுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புகள், உறவுகளை இந்தியா வைத்திருந்தாலும் போர்த் தளபாடங்களையோ, ஆயுதங்களையோ வெளிப்படையாகவும் பெருமளவிலும் வழங்க முடியாத கட்டாயத்திற்குள் புதுடில்லி இருந்து வந்தது.
தமிழ்நாட்டில் உணர்வு ரீதியான பிரச்சினையை எழுப்பும் என்பதாலும், புதுடில்லியில் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் செல்வாக்கு இருந்ததாலும் இந்தநிலை காணப்பட்டது. இதனால் இந்தியா ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையுடன் பதாதுகாப்பு உறவுகளை வளர்த்து விரிவாக்கிக் கொள்வதில் சீனாவும், பாகிஸ்தானும் வெற்றியைப் பெற்றிருந்தன.
இந்த இரண்டு நாடுகளும் புலிகளுக்கு எதிரான போருக்குத் தேவையான பெருமளவு ஆயுதங்களை வழங்கியிருந்தன. போருக்குப் பின்னரும் இந்த உறவு தொடர்ந்திருந்தது.
இது இந்தியாவுக்குத் தலைவலியான ஒரு விடயமாகவே இருந்து வந்தது.
இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவுக்கு போட்டி நாடுகள். இரண்டுமே எல்லைகளுக்காக இந்தியாவுடன் போரிட்ட நாடுகள். இவற்றின் வளர்ச்சியும் கூட்டும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உணர்வை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவுகளை குறிப்பாக இராணுவ உறவுகளை இந்தியாவினால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
அவ்வப்போது இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் சீனா, பாகிஸ்தான் தரும் இராணுவ உதவிகளை இந்தியா தந்தால் கைவிடுகிறோம் என்று கூறி புதுடில்லியை மடக்கி வந்தது கொழும்பு.
அதைவிட இலங்கை கோரும் இராணுவ உதவிகள் விடயத்தில் இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுப்பதும் குறைவு.
அரசியல் ரீதியான நெருக்கடிகளும் இருப்பதால் உடனடியாக முடிவுகளை எடுப்பதும் இல்லை.
2013ம் ஆண்டு தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமுக்கு குதிரைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டது இலங்கை இராணுவம்.
ஆனால் இந்தியா வழங்காமல் இழுத்தடித்தது. அதற்கிடையில் பாகிஸ்தான் உடனடியாகவே குதிரைகளை வழங்க முன்வந்தது.
இலங்கை விமானப்படையின் சீ 130 விமானம் பாகிஸ்தான் சென்று ஆறு குதிரைகளை ஏற்றி வந்து கொண்டிருந்த போது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக இந்தியாவின் புனே விமானத்தளத்திலே் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. இப்போது தான் இந்திய இராணுவம் விழித்துக் கொண்டது. பாகிஸ்தான் குதிரைகள் கொழும்பு வந்து சேர்ந்த சில நாட்களில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் வரிசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் போர் நடவடிக்கையை ஆரம்பித்ததால் அந்தப் பயணம் தடைப்பட்டது.
அதனால் குதிரைகள் கையளிப்பு பிற்போடப்பட அந்த இடைவெளிக்குள் இந்தியா குதிரைகளை அனுப்பி வைத்தது.
இதுபோன்ற நிலையை மாற்றி இலங்கை இராணுவத்தை தரமுயர்த்த அதன் போர்த் தளபாடங்களை நவீனமயப்படுத்தி தரமுயர்த்த இந்தியா உதவப் போகிறது என்ற தகவல் வெளியான நிலையில் தான் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் கொழும்பில் பேச்சுக்களை நடத்தி இருக்கிறார்.
ஆனால் அதுபற்றிய விரிவான விபரங்களை இரு நாடுகளும் வெளியிடவில்லை.
இலங்கை இராணுவ6த்தை தரமுயர்த்த இந்திய இராணுவம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இது போர்த்தளபாடங்களை மறுசீரமைப்பதற்கான திட்டமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
சைபர் தாக்குதல் உள்ளிட்ட வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இலங்கை இராணுவத்தை சர்வதேச தரங்களுக்கேற்ப நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய இராணுவத் தளபதி வலியுறுத்தியிருக்கிறார்.
அதற்கான உதவிகளை இலங்கை இராணுவத் தளபதி கோரிய போதே தொழில்நுட்ப உதவிகளை வழங்க இந்திய தளபதி இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் முன்னர் கூறப்பட்டது போன்று போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகள் உள்ளிட்ட இலங்கைப் படைகளின் ஆயுதங்களை மறுசீரமைப்பதற்கான உதவிகளை இந்தியா வழங்க முன்வந்துள்ளதாக தெரியவில்லை. இலங்கை இராணுவத்திடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் சீனாவிடம் வாங்கப்பட்டவை. அவற்றை இந்தியா மறுசீரமைக்கவோ நவீனமயப்படுத்தவோ முடியாது.
அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமன்றி இராஜதந்திர ரீதியான சர்ச்சைகளையும் உருவாக்கும். இலங்கையில் சீனாவினதும், பாகிஸ்தானதும் செல்வாக்கை குறைப்பதற்கு இந்தியா முயற்சிக்கிறது.
அதற்காக இலங்கை தொடர்பான பாதுகாப்புக் கொள்கையை இந்தியா மாற்றி அமைக்கலாம்.
போரில்லாத இப்போதைய சூழலும் புதுடில்லியில் அமைந்துள்ள நிலையான அரசாங்கமும் அந்த முடிவை எடுப்பதற்கான வலுவைக் கொடுக்கும்.
இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இலங்கையின் போர்த் தளபாடங்களை மறுசீரமைக்கும் அளவுக்கு பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா உடனடியாக மூக்கை நுழைக்கும் போலத் தெரியவில்லை. ஆனால் உறுதியாகவும் மெதுவாகவும் இலங்கையுடனான பாதுகாப்பு உறவை வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றி வருகிறது புதுடில்லி.
அதற்கான ஒரு களமாகவே இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் அமைக்கப்பட்டிருந்தது.
சுபத்ரா